கர்நாடகாவில் இருந்து குட்கா வாங்கிவந்த பெண் உட்பட 8 பேர் கைது.3 வாகனங்கள் பறிமுதல் -
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாலக்காட்டை சேர்ந்த சுதின்குமார் மற்றும் சுனில் ஆகியோர் பேக்கரி நடத்தி வருகின்றனர் மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து சட்ட விரோதமாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பொன்வேல் ராஜன் மற்றும் கம்மாளபட்டியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணும் ராகுல் என்பவர் மூலம் சுதீன் குமார் மற்றும் சுனில் ஆகியோரிடம் விற்பனைக்காக குட்கா கேட்டுள்ளனர்.அவர்களுக்கு கொண்டு வந்த குட்கா பொருட்களை பல்லடம் அண்ணா நகர் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியுள்ளனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவல் கிடைத்து சம்பவ இடம் சென்ற போலீசார் விற்பனைக்காக கொண்டு வந்த குட்கா மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பொன்வேல் ராஜன் மற்றும் கார்த்திகா பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 850 கிலோ குட்காவை வாங்கியது தெரியவந்தது.அதனை தொடர்ந்து பாலக்காட்டை சேர்ந்த இளம்பெண் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இரண்டு பொலிரோ வாகனம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags : கர்நாடகாவில் இருந்து குட்கா வாங்கிவந்த பெண் உட்பட 8 பேர் கைது.3 வாகனங்கள் பறிமுதல் -