நம் ஆரோக்கியம் என்பது நம் குடும்பம் சார்ந்தது.

by Admin / 20-11-2024 09:31:43pm
 நம் ஆரோக்கியம் என்பது நம் குடும்பம் சார்ந்தது.

 நம் ஆரோக்கியம் என்பது நம் உடல் சார்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் தனி மனிதராக இல்லை என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

.நம் குடும்பம், நம்மைச் சார்ந்த இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதனின் சகலமும் நம்மோடு பின்னிப்பிணைந்து இருப்பது... உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று நம் முன்னோர்கள் சொன்ன வேத வாக்கை நாம் மனதிற்குள் இருத்திக் கொள்ள வேண்டும்.

. தினமும் இரண்டு வேளை வயிற்றில் உணவின் கழிவுகளை வெளியேற்றி விட வேண்டும்

. இரண்டு முறை குளிக்க வேண்டும். பல்லை பாதுகாக்க  உணவு உண்ட பிறகு வாயை சுத்தப்படுத்த வேண்டும்..

எந்த நேரத்திலும் எப்பொழுதும் காட்சி வடிகட்டிய சூடான தண்ணீரை மட்டுமே அருந்த பழகிக் கொள்ள வேண்டும்

. வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கின்ற உணவுகளை தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் உண்ண வேண்டுமே தவிர தினமும் அதை பயன்படுத்தக் கூடாது.

தலைக்கு நல்லெண்ணெயோ தேங்காய் எண்ணெயோ வைத்து தேய்க்க வேண்டும்

. அதிக காரம் உடைய உணவு, வாய்வு தொல்லை தரக்கூடிய பருப்பு வகைகள் கிழங்கு வகைகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

பால், தயிர் தினமும் பயன்படுத்த வேண்டும்.

அரிசி உணவோடு நார்ச்சத்துள்ள கோதுமை உணவை பயன்படுத்துங்கள்.மைதாஉணவை சுவைக்காக எப்போதாவது ஒரு முறை உண்ணுங்கள்.

. தினமும் ஒரு பழம் அது வாழைப்பழமோ  இல்லை .வேறு ஏதாவது ஒரு பழமோசாப்பிட வேண்டும்.போிச்சம் பழம்,முந்திாி பருப்பு,பாதாம் பருப்பு வாரம் ஒரு முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

. உப்பு, காரம்,புளி, சர்க்கரை அதிகமாக நாம் உண்ணக்கூடிய உணவிலே சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

. கூடுமானவரை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் என்னை தேய்த்து குளிப்பதன் மூலமாக உடல் சூட்டை குறைக்க முடியும். அதன் காரணமாக உடலுக்குள்ளே ஏற்படக்கூடிய நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதோடு தலையில் முடி கொட்டுகிற பிரச்சனையும் இல்லாமல் போகும்.

. சீதோசன நிலைக்கு தகுந்தவாறு கிடைக்கின்ற பழங்களை காய்கறிகளை உண்பதின் மூலமாக நம் உடல் அதற்குத் தக நோயற்ற நிலையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகைச் செய்யும்.

கூடுமானவரை கம்பு ,சோளம், பச்சை பயிறு ,வேர்க்கடலை ,உளுந்து தானிய வகைகளை சிறு உணவாக எடுத்துக் கொள்ளலாம். அவை உடலுக்கு தேவையான பல்வேறு விதமான சத்துக்களை கொடுக்க கூடியவை

. இஞ்சி, பூண்டு, எலுமிச்சை,நார்த்தை காய் சாறு அருந்துவது ஒருவிதமான நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குள் கொண்டு வரும். தேநீர் அருந்த வேண்டும் என்றால் பால் கலக்காத தேநீரை அருந்துங்கள்.

முட்டை, மாமிசம் வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மீன் உணவு கொழுப்பற்றது.  அதனால்,அவற்றை அதிகம் பயன்படுத்தலாம்.

சாதாரணமான மாலை வேலைகளில் கொண்டக்கடலை சுண்டல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான புரதச்சத்து மாமிசத்தை போல் கிடைக்கும்..

 மலை பகுதியில் கிடைக்கும் காய்கறிகளான கேரட் பீட்ரூட், முட்டை கோஸ், ப்ரோக்கோலி பழங்களான பிளம்ஸ் ,,ஆப்பிள் இன்னவரை பழங்களை சாப்பிடலாம்.

 வெண்ணெய்,,நெய் அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உணவில் தேங்காய்,தேங்காய் எண்ணெய் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு படி.

 பாரம்பரிய எண்ணையான நல்லெண்ணெய் கடலை எண்ணெய் போன்றவற்றை சமையலில் பயன்படுத்துவது அதிகம் கொலஸ்ட்ரால் சேராமல் இருப்பதற்கான வழி.

 

 நம் ஆரோக்கியம் என்பது நம் குடும்பம் சார்ந்தது.
 

Tags :

Share via