மனோபாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 03-05-2023 04:29:36pm
மனோபாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மனோபாலா பாராட்டியது என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்' தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via