நீட் தேர்வு: "திமுக நாடகத்தை அரங்கேற்றுகிறது” - அண்ணாமலை

by Staff / 03-07-2024 12:12:12pm
நீட் தேர்வு:

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் நாடகம் அரங்கேற்றுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “முழுமையான விவரமில்லாத ஏ.கே.ராஜன் அறிக்கையை வைத்து திமுக நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடர்கிறது. நீட் தேர்வு வந்த பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாணவர்கள் பயனடைந்ததால் போலி பிம்பம் உடைந்துவிடும் என திமுக பயப்படுகிறது” என்றார். தொடர்ந்து, திமுகவினர் பல இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via