முகச்சுருக்கத்தை நீக்க

by Writer / 01-09-2021 07:58:51pm
முகச்சுருக்கத்தை நீக்க

முகச் சுருக்கம் நீங்க-புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மாவு போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும். பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.

ஒரு கிண்ணத்தில் 1/2 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு அல்லது பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின் சாதாரண நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கைவாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல் பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும் பெறும்.

சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.

கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவவேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும்.

சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.

ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

 

Tags :

Share via

More stories

Logo