பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமருடன் இணைந்து சுமார் 35,000 பேர் ஒரே இடத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், யோகா அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டின் யோகா தினம் ஆரோக்கியமான முதுமைக்கான யோகாஎன்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு, கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்
.பிரதமர் மோடி,யோகாவை ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் செய்யாமல், நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனித வாழ்க்கையின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒரு சிறந்த வழிமுறை எனக் குறிப்பிட்டார்.மேலும், நமது இலக்கு 20 வயதில் இருந்ததை விட 40 வயதில் அதிக உடல் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதே ஆகும்என்றும் அவர் பேசினார்.
கொல்கத்தாவின் ஒட்டுமொத்தப் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு யோகா அமர்வுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். ஹூக்ளி நதியில் சுமார் 500 படகுகளில் இருந்தபடி ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் யோகா பயிற்சிகளைச் செய்தனர்.
Tags :


















