தமிழகம் முழுவதும் பவர்கட் பிரச்சனை -மின்வெட்டில் முதல் தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு
இன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சி மீது சுமத்தினார். ஆளுநர் உரை ஆளுங்கட்சியின் புகழ்பாடுவதாக இருந்ததை தவிர ஆக்கபூர்வமாக இல்லை என்றும் அது ரிலீஸ் போடுவதற்கு மட்டுமே பயன்பட்டதாகவும் ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பவர்கட் பிரச்சனை நடந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் தொகுதியை முதன்மையான பகுதியாக கொண்டு வருவதாக சொன்னார்கள் ஆம் கொண்டு வந்துள்ளார்கள். மின்வெட்டில் முதல் தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளதாகவும் முன்பெல்லாம் மழை பெய்தால் இன்று பள்ளி உண்டா ?இல்லையா ?என்பதை தொலைக்காட்சி மாணவர்கள் விடுமுறையை தெரிந்து கொள்வார்கள் என்று மின் வெட்டை வைத்துக் கொண்டு பள்ளி விடுமுறை என்பதை அறிந்து கொள்கிறார்கள். கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அலுவலகத்திலும் மின்சாரம் இல்லை ஆளுங்கட்சி தலைமையகமான பனையூரிலும் மின்சாரம் இல்லை என்றும் எங்களுடைய ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் உரிமைத்தொகை காலை உணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு பாராட்டுக்களை கூறியதோடு காலை உணவு திட்டம் செப்டம்பர் 17 பெரியார் தினத்தன்று எட்டாம் வகுப்பு வரை விரிவு செய்யப்படும் என்று சொல்வதற்கும் பாராட்டுக்களை கூறியதோடு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பலனடைந்து உள்ளார்கள் அதிலும் 60க்கும் மேற்பட்டவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய அளவில் ராஜேஸ்வரி என்பவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளதற்கு அடிப்படை காரணம் நான் முதல்வன் திட்டம் தான். அந்தத் திட்டத்தை நிறுத்தி விடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டிய சிறிய பெண் படை ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறது. கோவையில் 10 வயசு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் குமுளிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டது.திருவைகுண்டத்தில் ஆளுகட்சியினரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்தவெகவைச்சாா்ந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளாா்.அதற்கு தவெக சட்டமன்றஉறுப்பினர் ஆதரவாகஇருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் பேட்டி கொடுத்துள்ளாா் என்றும் சிங்கப்பெண் படையில் உள்ள ஒரு பெண் காவலரே மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார்.தூய சக்தி என்று சொன்ன தமிழக வெற்றிக்கழக அரசு தீர்ந்து போன கட்சிகளிடமிருந்து உறுப்பினர்களை பெற்று தீர்ந்து போன கட்சியாக மாறி உள்ளது என்றும்மூன்று சோபா 5 சோபாக்களை அனுப்பி தீர்ந்து போன கட்சி என்று சொன்னவர்களிடமிருந்து ஆட்களை பிடித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஆளுங்கட்சி மக்களினுடைய நலன்களை முன்னிறுத்தி ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாா்.
Tags :


















