செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா.. வந்து பெற்றுக்கொள்ளலாம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நக்கல்

by Editor / 14-08-2022 12:10:00pm
செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா.. வந்து பெற்றுக்கொள்ளலாம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நக்கல்

தனது கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பழனிவேல் தியாகராஜன், பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. இது சரியான தருணம் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில், தன் கார் மீது வீசப்பட்ட செருப்பை இணைத்து பழனிவேல் தியாகராஜன் ஒரு ட்விட் வெளியிட்டுள்ளார். அதில் நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுவேன், ஆனால் இப்போதைக்கு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சில 100 மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட காணாமல் போன ‘பழைய விமான முணையத்தின் சிண்ட்ரெல்லா’ தனது செருப்பு மீண்டும் வேண்டும் என நினைத்தால், அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories