ஆசிரியர் வீட்டில் துப்பாக்கி, கையெறி குண்டுகள் பறிமுதல்

by Staff / 21-04-2024 03:22:14pm
ஆசிரியர் வீட்டில் துப்பாக்கி, கையெறி குண்டுகள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் இந்திய ராணுவமும் மாநில காவல்துறையும் இணைந்து இன்று கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன. அப்போது அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கமாருதீன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் சீன வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பயங்கரவாத சக்திகளின் ஸ்லீப்பர் செல்லாக இருந்து வந்ததை பாதுகாப்புப் படையினர் அடையாளம் காண்டுள்ளனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூஞ்ச் ​​மாநிலத்தில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via

More stories