பாஜக குறித்து பேச சற்றும் தகுதி இல்லாத கட்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்

by Staff / 14-04-2023 02:43:40pm
பாஜக குறித்து பேச சற்றும் தகுதி இல்லாத கட்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'பாஜக ஊழல் குறித்து பேச சற்று தகுதி இல்லாத கட்சி. நீரவ் மோடி முதல் அதானி வரையிலும் பலருக்கு துணை போகும் கட்சி, பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை வைத்துக்கொண்டு இவர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதியற்றவர்கள். திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது மக்களின் எண்ணத்தை திசை திருப்பும் செயல். பாஜகவின் ஊழல் பட்டியல் சந்தி சிரிக்கும் அளவிற்கு மக்களுக்கு தெரியும்' என்றார்.

 

Tags :

Share via
Logo