பெண்ணின் எண்களை முகநூலில் பதிவிட்டவர் கைது

by Staff / 04-11-2023 05:18:50pm
பெண்ணின் எண்களை முகநூலில் பதிவிட்டவர் கைது

சேலையூர் அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்தவர் சத்யா, 35. இவர், தன் மொபைல் போன் எண்ணை இணையத்தில் யாரோ பதிவிட்டுள்ளதாகவும், அதனால், தேவையற்ற அழைப்புகள் வருவதாகவும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செப். , 19ல் புகார் அளித்தார். சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணையில், வேங்கைவாசலை சேர்ந்த செந்தில்குமார், 48, என்பவர், சத்யா மொபைல் போன் எண்ணை, தவறான முகநூல் பக்கத்தில் பதிவிட்டது தெரிந்தது.செந்தில்குமாரை, போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த ஜூன் மாதம், இருசக்கர வாகனத்தில் சென்ற சத்யா விபத்தில் சிக்கி, கால் முறிவு ஏற்பட்டது. அதற்கு காரணமான செந்தில்குமார், மருத்துவ செலவை ஏற்பதாக கூறி, சத்யா எண்ணை பெற்று, முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories