அதிக வாக்குகள் பெற்று தருபவர்களுக்கு தங்கச் செயின் பரிசு
தேனி மாவட்டம் போடி திமுக அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகரச் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பொதுமக்களை எவ்வாறு நேரில் சென்று அணுகி வாக்குகளை சேகரிப்பது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தங்கள் வார்டில் அதிக வாக்குகளை பெற்று தரும் கிளைக் கழகச் செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் இருவருக்கும் தலா ஒரு பவுன் தங்கச் செயின் நகரச் செயலாளர் புருசோத்தமன் சார்பாக வழங்கப்படும் என அறிவித்தார்.
Tags :