முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 2ஆவது அலையில் அதிக அளவிலான நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதனால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளியே மூடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்தும், கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்க நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
Tags :