புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம்  :  மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்

by Editor / 12-05-2021 09:23:11pm
புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம்  :  மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்


 

புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம்என  எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். கடித்தில் சோனியா, தேவகவுடா, உத்தவ் தாக்கரே, சரத்பவார், ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால்,ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமான பணிக்கு செலவிடும் நிதியை ஆக்ஸிஜன், தடுப்பூசி வாங்கிட பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo