மாணவர்கள் நடத்திய ஜாதி ரீதியான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

by Admin / 24-02-2026 12:43:48am
 மாணவர்கள் நடத்திய ஜாதி ரீதியான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் மாணவர்கள் நடத்திய ஜாதி ரீதியான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜீவானந்தம் மீது சக மாணவர்கள் ஜாதி வெறியில் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் எந்த மத நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பிய அவர் மாணவர்கள் இடையே சாதிய விஷம் பரவுவதற்கு அரசு பொறுப்பு என்றும் சாடியுள்ளார். தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளின் சமத்துவ எண்ணங்களை போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via
Logo