அரசு பேரூந்தில் மது பாட்டில்கள் -சாராயம் கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் போன்றவை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ராகுல் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் நாகப்பட்டிணத்திலிருந்து திருவாரூர் வந்த அரசுப் பேருந்தில் நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோயில் மதகடித் தெருவை சேர்ந்த திவ்யா (வயது 40)மற்றும் நாகை மாவட்டம் கொத்தத்தெரு பகுதியைச் சேர்ந்த தீபா(வயது 35) ஆகிய இருவரின் டிராவல் பேக் மற்றும் கட்டை பையில் சோதனை செய்தபோது பாண்டிச்சேரி மது.பாட்டில்கள் 780 எம்எல் ஆறு பாட்டில்கள் 375 எம்எல் 70 பாட்டில்களும் மற்றும் 10 லிட்டர் பாண்டி சாராயம் என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து மது பாட்டில்களை கடத்தி வந்த இரு பெண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : அரசு பேரூந்தில் மது பாட்டில்கள் -சாராயம் கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது.