ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தோர் கைது

by Staff / 22-09-2023 01:25:06pm
ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தோர் கைது

சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் முனு அலெக்சாண்டர்; டாக்டர். தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இவருக்கு, சென்னை அண்ணாசாலையில், 3, 149 சதுர அடி கொண்ட கட்டடம் உள்ளது. இதை சிலர், போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டதாக, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆய்வாளர் பொன்சித்ரா தலைமையில் தனிப்படை அமைத்தனர்.தனிப்படை போலீசார் விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர், 54, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பீர் முகமது, 56, ஆகிய இருவரும், போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்தது தெரிந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு, 20 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories