by Staff /
07-07-2023
05:31:46pm
எருமப்பட்டி யூனியன் புதுக்கோட்டை பிரிவில் செந்தில்குமார் (40) என்பவர் பிளவர் ஆயில் மில் நடத்தி வருகிறார். ஆயில் மில்லை செந்தில்குமார் பூட்டி சென்றார். சிறிது நேரத்தில் மில்லிருந்து புகை வெளியேறியது. அதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு தீயணைப்பு துறையா செல்வதற்குள் தீ மள மளவென அனைத்து பகுதிகளிலும் பரவியதால் அங்கிருந்து ஆயில் எண்ணெய் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. பின் தீயணைப்புத் துறையினர் தீயணைத்தனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்றனர்.
Tags :
Share via