காவலர்களுக்கு மன அழுத்தம் உள்ளது - அண்ணாமலை

by Staff / 07-07-2023 05:26:18pm
காவலர்களுக்கு மன அழுத்தம் உள்ளது - அண்ணாமலை கோவையில் சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஐஜி இப்போது நம்மிடம் இல்லை என்பது துக்கமளிக்கிறது. நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலை அளிக்கிறது. நல்ல நேர்மையான, அதிகாரியாக பணி செய்தவர். காவல்துறையில் அடிமட்டத்தில் உட்சபச்ச மன அழுத்தம் உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு வேறு விதமான மன அழுத்தம் உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இப்படி தற்கொலையை பார்க்கிறோம். தற்கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்'' என்றார்.
 

Tags :

Share via

More stories