ஏற்காட்டில் கனமழை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி....

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது கடுமையான வெயிலுக்குப் பின்பு தற்போது மழை பொழிந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 110 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வந்த நிலையில் ஏற்காடு பகுதிகளிலும் அதிகப்படியான வெப்பம் நிலவி வந்தது. தற்போது ஏற்காட்டில் பழைய சீதோசன நிலைக்கு மாறியுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக ஏற்காட்டில் மழைப்பொழிவு அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஏற்காடு அண்ணா பூங்கா ஏரி பூங்கா படகு இல்லம் பூங்கா லேடிஸ் சீட் ஜென்சீட் அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்த நிலையில் ஏற்காட்டில் கனமழை பொழிந்து வருகிறது.கனமழையை சுற்றுலாப் பயணிகள் ரசித்த வண்ணம் உள்ளனர்.
Tags :