போலிஸ் என கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த நபரை கைது செய்த காவல்துறை

by Staff / 09-05-2024 05:31:34pm
போலிஸ் என கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த நபரை கைது செய்த காவல்துறை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்ன அக்ராஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தான் பணபுரியும் நிறுவனத்தின் சார்பில் பணம் வசூல் செய்துவிட்டு மதுரை திலகர்திடல் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட கோபாலன் கொத்தன் தெரு பகுதியில் சென்றுள்ளார்.அப்போது திடிரென முருகனை வழிமறித்த திடீர்நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் தன்னை போல போலிஸ் என கூறி சோதனை செய்வது போல நடித்து பையில் இருந்த 1.5 லட்சம் பணத்தை திருடியதாக முருகன் அளித்த புகாரின் கீழ் திலகர்திடல் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

 

Tags :

Share via

More stories