3வது அலையை தவிர்க்க   வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

by Editor / 30-06-2021 04:18:59pm
3வது அலையை தவிர்க்க   வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு



இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். அதற்குள் இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி விடுவார்கள் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் மூன்றாவது அலை குறித்து மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு கூட்டமாக சேர்வதை மக்கள் தவிர்த்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலையை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த ஊரடங்கு தளர்வுகளை தவறாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தான் பொதுமக்கள் மிகுந்த கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via