உயர்கல்விக்கு விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
மாணவர் சேர்க்கைக்கு யாரும் நேரில் வரவேண்டாம். கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் இணையதளத்திலேயே பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உயர்கல்விக்கு விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. மாணவர்களின் மதிப்பெண் விபரம் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து உயர் கல்வி படிக்க 26-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.திருப்பூரில் உள்ள பல அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, சீட்டுகள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விசாரிக்க கல்லூரிக்கே நேரடியாக வந்த வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:மாணவர் சேர்க்கைக்கு யாரும் நேரில் வரவேண்டாம்.
கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் இணையதளத்திலேயே பதிவு செய்ய வேண்டும். சேர்க்கை குறித்த அறிவிப்பு மாணவர்களுக்கு தெரிவித்து ஆன்லைனிலேயே சேர்க்கை நடைபெறும் எனக்கூறி திருப்பி அனுப்பி வைக்கிறாம். அரசு வழிகாட்டுதலின்கீழ் உரிய இடஒதுக்கீடு வழங்கி நடத்தப்படும். அனைவரும் பாஸ் என்பதால் இந்த ஆண்டு கல்லூரிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது’ என்றனர்.இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் (2021-22) சேர்க்கைக்கான, விண்ணப்பங்களை www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள 150 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Tags :