சவுக்கு சங்கர் ஜாமீன் மனு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Staff / 23-05-2024 01:32:31pm
சவுக்கு சங்கர் ஜாமீன் மனு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கடந்த 4ஆம் தேதி சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் தேனி வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

 

Tags :

Share via
Logo