எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

by Staff / 23-05-2024 01:36:11pm
எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி எஸ்.ஆர்.சேகர் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.ஆர்.சேகர் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. ஆகவே மீண்டும் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via