ரவுடி கழுத்து அறுத்து கொலை இருவர் கைது

கன்னியாகுமரி அருகே தன்னை இகழ்ந்து பேசிய ரவுடியை திட்டமிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த ரவுடியையும் அவனது நண்பனையும் போலீசார் கைது செய்தனர். களிங்கா விவிளையை சேர்ந்த பிரபல ரவுடியான ரீகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அஜின் ஜோஸ் என்ற ரவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது .சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு இருவரும் ஒன்றாக மது அருந்த வந்த நிலையில், ஜோஸ் நீ எல்லாம் பெரிய ரவுடினு வெளியில் சொல்லிவிடாதே என ரீகன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ் , ரீகனை கொலை செய்ய திட்டம் தீட்டி, பிளிப் கார்ட்டில் கத்தியை ஆர்டர் செய்து உள்ளான். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீகனை மதுக் கடைக்கு அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து நான்கு வழி சாலை அ ருகே இருவரும் சேர்ந்து ரீகனை கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
Tags :