தமிழகத்தில் இவ்வளவு பேர் மதுவுக்கு அடிமையா?

by Admin / 21-07-2021 02:14:55pm
தமிழகத்தில் இவ்வளவு பேர் மதுவுக்கு அடிமையா?



தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கூட்டத்தின்போது உறுப்பினர் ஒருவர் நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரைக்கு எவ்வளவு பேர் அடிமையாக உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு சமூக நீதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-


நாடு முழுவதும் 15 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. உத்தரபிரதேசத்தில் அதிகம் பேர் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர்.


அங்கு 3 கோடியே 86 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது. தமிழகத்தில் 90 லட்சம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர்மதுப்பிரியர்நாடு முழுவதும் 2 கோடியே 90 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 1 கோடியே 20 லட்சத்து 31 ஆயிரம் பேர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர்.தமிழகத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்.நாடு முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 44 ஆயிரம் பேர் போதை மாத்திரை பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேர் போதை மாத்திரைக்கு அடிமையாக உள்ளனர்.போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்கும் பணியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 850-க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

Tags :

Share via