ஆளும்கட்சி தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் திணறியது சென்னை.
தமிழகத்தில் போக்குவரத்து துறை, தனியார்மயமாதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதன் காரணமாக சென்னையில் இயங்கிக்கொண்டிருந்த அரசுப்பேருந்துக்கள் பணிமனைக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு உருவானது.சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தம்.
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை நியமிக்கும் முடிவிற்கு
தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயங்க தொடங்கியது.
Tags :