தமிழ்நாட்டில் இன்று (ஏப்.1) முதல் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு, பெண்களுக்கு பத்திரப் பதிவுக் கட்டண சலுகை, யுபிஐ செயலியில் மாற்றம், சிலிண்டர் விலை மாற்றம், சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை.தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 1 ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.சுங்கக் கட்டணம் உயர்வு: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக, 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.
Tags : தமிழ்நாட்டில் இன்று (ஏப்.1) முதல் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்.