இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை 94 மின்சார ரயில்கள் ரத்து.

by Editor / 18-11-2023 10:04:00am
இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை 94 மின்சார ரயில்கள் ரத்து.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் பணிமனையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்ட்ரலிலிருந்து இன்று இரவு 9.25, 10, 10.20, 10.35, 11.15, 11.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராமிலிருந்து இரவு 10.45, 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் என 10 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags : இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை 94 மின்சார ரயில்கள் ரத்து.

Share via

More stories