அசாம் மாநிலம் கவுகாத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடியாகக் கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அசாம் மாநிலம் கவுகாத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் 48 மணி நேரக் கெடு விதித்திருந்தநிலையில், காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்...இந்தக் கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து,கட்சி தன்னார்வலர்கள் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே காவல் துறையினா் பல நிர்வாகிகளைத் தடுத்துக் காவலில் எடுத்து, ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மும்பையில் தேசிய அளவிலான தொடர் போராட்டத்தை நடத்தப் போவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது இதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















