தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது -முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

by Admin / 11-02-2026 11:58:18am
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது -முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

இந்தியா டுடே நடத்திய  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிப்பீர்களா என்று கேட்டதற்கு தமிழ்நாட்டில் அது ஒத்து வராது என்றும் அது எங்களுக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும். சிலர் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்று பேசி வருவதாகவும் தெரிவித்தார். தாம் கலைஞரிடம் கற்றது., உழைப்பு... உழைப்பு.. உழைப்பு என்பது மட்டும் தான். அதைத்தான் நான் என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினிடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். ராகுல் காந்தி என்னை சகோதரராக பார்க்கிறார். அவருக்கும் எனக்கும் இடையில் எந்த விதமான முரண்பாடுகள் கிடையாது. கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை. ஊடகங்கள் தான் அவற்றை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தான் வீதியில் ,பள்ளியில் படிக்கையில் கிரிக்கெட்  விளையாடியதாகவும் சேப்பாக்கத்தில் திரைப்பட நடிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடையே நடந்த போட்டியில் கிரிக்கெட் போட்டியில் தாம் பவுலராக இருந்தது குறித்தும் தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இதைச் செய்வோம் என்று சொல்லி வந்தோம் .இப்பொழுது செய்ததை சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் தமிழகத்தில் திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூ,ர் தூத்துக்குடி என எல்லா மாவட்டங்களுக்கும் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நன்றி-இந்தியா டுடே

 

Tags :

Share via