பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

by Editor / 08-04-2023 09:12:21am
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

 இன்று மதியம் இரண்டு 45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்க, சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கு ஏற்ப்பதற்காகவும் இன்று சென்னை வருகிறார் இதன் காரணமாக சென்னை முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அதுடன் போக்குவரத்து பல்வேறு பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சென்னை வந்தே  பாரத் ரயில் சேவை திட்டத்தை முதலில் தொடங்கி வைக்கஉள்ளார். பிரதமர் வருகையை ஒட்டி போலீசார் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்,. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் முழுவதும் பரிசோதனைக்கு  பின்பே அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். .ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் கொண்டு சோதனையிட்ட பிறகு பயணிகளை போலீசார்  அனுமதிக்கிறார்கள். சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையையும் இரவு முதல் தீவிரமாக சோதித்து வரும் காவல்துறையினர் மெரினா-காமராசா்சாலை உள்ளிட்ட தீவிர ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories