மாநிலக்கல்விக்கொள்கை குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம்

by Admin / 15-06-2022 10:58:39am
மாநிலக்கல்விக்கொள்கை குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம்

தமிழ் நாட்டு சூழலுக்குத்தக கல்விக்கொள்கை உருவாக்கப்படுமென்று தமிழக முதலமைச்சர்   அறிவித்ததோடுமாநிலக்கலவிக்கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் பதிமூன்று பேர் கொண்ட குழுவை அறிவித்தார்.இக்குழுவில் பேராசிரியர்கள்,கலவியாளர்கள்,பல்துறை சார்ந்த வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர்.தமிழக அரசின் பத்து வழிகாட்டுதல்கள் அடிப்படையில் உயர்கல்வி,தேர்வு முறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை அடிப்படையாகக்கொண்டு இக்குழு மாநில க்கல்விக் கொள்கையை தயார்படுத்தும் பணியை மேற்கொள்ளும்.இக்குழு அமைக்கப்பட்ட பின்பு இன்று முதல் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது
 

Tags :

Share via