டாக்டரை ட்ரெய்லர் சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன்னே 2 குழந்தைகள் பலி செங்கல்பட்டில் சோகம்

by Editor / 07-08-2022 05:37:20pm
டாக்டரை ட்ரெய்லர் சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன்னே 2 குழந்தைகள் பலி செங்கல்பட்டில் சோகம்

செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் தனது 2 குழந்தைகளுடன் சென்ற பெண் டாக்டரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த ஸ்கூட்டரில் மோதி கீழே விழுந்ததில் டிராக்டரின் ட்ரெய்லர் சக்கரத்தில் சிக்கி இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.கருநீலம்  பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண் தனது குழந்தைகள் சித்தார்த்து லோகேஷ் உடன்  இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கருநீல பிரதான சாலையில் முன்னேறிச் சென்ற டிராக்டரை வலதுபுறமாக தேன்மொழி முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த மற்றொரு ஸ்கூட்டர் மோதியதில் தேன்மொழியும் அவரது குழந்தைகளும்  ட்ரெய்லர் சக்கரத்திற்கும் அருகே விழுந்தனர் அப்போது ட்ரெய்லர் சக்கரம் ஏறி இறங்கியதில் இரண்டு குழந்தைகளும் தாய் கண் முன்னே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த தேன்மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories