புகையிலை பொருட்கள் விற்ற பனியன் தொழிலாளி கைது

by Staff / 06-09-2023 02:25:21pm
புகையிலை பொருட்கள் விற்ற பனியன் தொழிலாளி கைது

புகையிலை பொருட்கள் விற்ற பனியன் தொழிலாளி கைது திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நொச் சிபாளையம் ஏ. பி. நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக் கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசா ரித்தனர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித் ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்தனர். அதில் 20 கிலோ புகை யிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜெய லலிதா நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெயசூர்யா (வயது 22) என்பதும் இவர் பனியன் நிறுவனத் தில் வேலை பார்த்துக் கொண்டு, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக எடுத்து வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 20 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமு தல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories