மாஸ்கோ தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். "மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் ரஷ்யாவின் அரசு மற்றும் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
Tags :