தூத்துக்குடியில் திருவிழாவை முன்னிட்டு 10 இடங்களில் வாகனம் நிறுத்துமிடம்.
தூத்துக்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் பனிமயமாதா ஆலயத் திருவிழாவில் ஆகஸ்ட் 3, 4, 5 தேதிகளில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை சார்பில் கோயில் சுற்றியுள்ள லசால் பள்ளி வளாகம், சேவியர் பள்ளி வளாகம், சின்னகோயில் வளாகம் உள்ளிட்ட 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
Tags : தூத்துக்குடியில் திருவிழாவை முன்னிட்டு 10 இடங்களில் வாகனம் நிறுத்துமிடம்