புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி குடமுழுக்கு செய்தல் மரபு. அந்த வகையில், மதுரை மீனாட்சி கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தள்ளிச் சென்ற குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு 68 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு இன்று சிறப்புற நடைபெற்றது. மதுரையின் சிறப்பு மீனாட்சி சொக்கநாதன்.. தமிழன் மரபு படி சொக்கநாதருக்கு மீனாட்சியை மணமுடித்துக் கொடுத்த அழகர் அண்ணனாக இருந்து சீர் வழங்கி சிறப்பு செய்யும் மதுரை.. இது மனிதர்களின் குடும்ப உறவு முறைகளை வெளிப்படுத்தி கடவுளும் மனிதர்களோடு நெருங்கியவர்கள் என்கிற எண்ணத்தை தோற்றுவிக்கும் பொருட்டு மதுரை மீனாட்சி திருமண வைபவம் புகழ்பெற்ற நிகழ்வாக நடைபெறும். சங்க இலக்கியத்தில் சிவபெருமான் எழுதிய பாடலிலே பிழை கண்டுபிடித்து நக்கீரனிடம் நெற்றிக்கண்ணை காட்டிய சிவனின் சிறப்புக்களை உணர்த்தும் மதுரை பொற்றாமரைக் குளம். தூங்கா நகரத்தில் தூங்காமல் இருந்து அருளாட்சி செய்யும் மதுரை மீனாட்சி குடமுழுக்கை காண உலகம் முழுவதும் இருக்க பக்த பெருமக்கள் இன்று வருகை தந்தனர்.
Tags :














