தென்காசி காசிவிசுவநாதர் திருக்கோயில் மாசிமகம் திருத்தேரோட்டம்

by Editor / 05-03-2023 11:34:16am
தென்காசி காசிவிசுவநாதர் திருக்கோயில் மாசிமகம் திருத்தேரோட்டம்

தென் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசிவிசுவநாதர் திருக்கோயில் மாசிமகம் திருத்தேரோட்டம் சிவ சிவ அரகரா கோஷங்கள் முழங்க வெகு விமர்சியாக நடைபெற்றது

தென் தமிழகத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. அதன்பின் சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, காலை  சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது.

காலை 9  மணிக்கு மேல் சுவாமி தேர் முதலில் இழுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ளள தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த தேர்  நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர், உலகம்மன் தேர்   இழுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இன்று விடுமுறை தினமென்பதால்  தென்காசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ அரகரா கோஷங்கள் முழங்க   பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி காசிவிசுவநாதர் திருக்கோயில் மாசிமகம் திருத்தேரோட்டம்
 

Tags :

Share via