தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் மாநில தேர்தல் ஆணையம்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் 498 ஊரக உள்ளாட்சி உதவி இடங்களுக்கு 50 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 20ஆம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூலை 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags :