2023-2024ஆம் ஆண்டில் 2233.25 கோடி முட்டைகள் உற்பத்தி தமிழகம் சாதனை.

by Editor / 20-05-2025 10:02:22am
 2023-2024ஆம் ஆண்டில் 2233.25 கோடி முட்டைகள் உற்பத்தி தமிழகம் சாதனை.

முட்டை உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. அரசு கோழிப் பண்ணைகளுக்கு அளித்து வரும் ஊக்கத்தின் பயனாக 2018-2019-ல் உற்பத்தியான 1884.22 கோடி முட்டைகளை விட 2023-2024ஆம் ஆண்டில் 2233.25 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கோழிப் பண்ணைகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 2023-2024ஆம் ஆண்டில் 2233.25 கோடி முட்டைகள் உற்பத்தி தமிழகம் சாதனை.

Share via