எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

by Staff / 02-02-2023 01:48:51pm
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக வெளியான அறிக்கையை தொடர்ந்து, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று வலியுறுத்தினர். ஆனால், அதனை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்தனர். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo