சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி  நடை திறக்கப்படுகிறது.

by Editor / 11-10-2024 10:52:20am
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி  நடை திறக்கப்படுகிறது.

புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார். பின்னர் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

 

Tags : சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி  நடை திறக்கப்படுகிறது.

Share via

More stories