கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை திட்டம்-1.27லட்சம் பேர் தகுதி நீக்கம்

by Admin / 10-12-2024 08:16:28pm
 கலைஞர் மகளிர்    உரிமைத்தொகை திட்டம்-1.27லட்சம் பேர் தகுதி நீக்கம்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. 1.15 கோடி பயனாளிகள் பயன் பெற்று வந்த நிலையில் தற்பொழுது1.27லட்சம் பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியாக  குறைந்துள்ளது

. இறந்தவர் நீக்கப்பட்டது குடும்ப உறுப்பினர்கள் கார் போன்ற வாகனங்கள் வாங்கியது, நிலம் வாங்கியது, அரசு வேலை பெறுதல், ஆண்டு வருமான வரம்பு மீறி வருமான வரிக் கணக்கு தாக்கல் போன்ற காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாதம் 1. 14 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் டிஜிட்டல் கண்காணிப்பின்படி ஆதார் மின் இணைப்பு போன்றவற்றின் மூலமாகவும் பயனாளிகள் 10 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு மிகாமல் இருத்தல் 2.5 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் கார் விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கியது,. சரக்கு சேவை வரி செலுத்து நிலையில் 50 லட்சத்திற்கு மிகவும் நிறுவனம் வைத்திருத்தல், ஆண்டுக்கு 3,600 க்கு மேல் மின்சார பயன்பாடு இவற்றின் அடிப்படையில் பயனாளிகளின் குடும்பம் இருந்ததன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via