திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்; ஏழுமலையானை தரிசிக்க காத்திருப்பு.

by Editor / 03-05-2022 11:21:23pm
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்; ஏழுமலையானை தரிசிக்க காத்திருப்பு.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்; ஏழுமலையானை தரிசிக்க 20 அறைகளில் காத்திருப்பு.பல்வேறு மாநிலங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. 

இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை 65,756 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34,774 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் ₹4.60 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 20 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo