21 குண்டுகள் முழங்க சார்பு ஆய்வாளரின் உடல் தகனம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் சீமைச்சாமி இவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு படையில் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தமிழக காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவையொட்டி நேற்று ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி சென்றனர்.
Tags :