குற்றாலம் பயணிகளை அபாய ஒலி எழுப்பி அவசர, அவசரமாக வெளியேற்றிய போலீசார்.

by Staff / 17-08-2025 06:24:54pm
குற்றாலம் பயணிகளை அபாய ஒலி எழுப்பி அவசர, அவசரமாக வெளியேற்றிய போலீசார்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் திடீரென சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, வெள்ளப்பெருக்கானது ஏற்பட்ட நிலையில், அதை கவனித்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.
 தொடர்ந்து, தற்போது குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட போதும், அருவிகளில் தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பயணிகளை அபாய ஒலி எழுப்பி அவசர, அவசரமாக வெளியேற்றிய போலீசார்.

Share via