மின்னல் முரளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்னல் முரளி படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜு வர்கீஸ், குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வீக் எண்ட் பிளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுசில் ஷ்யாம், ஷான் ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்னல் முரளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
Tags :