நைஜீரியாவில் பரவிய  வயிற்றுப் போக்கு

by Editor / 23-09-2021 04:38:28pm
நைஜீரியாவில் பரவிய  வயிற்றுப் போக்கு



ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், வயிற்றுப் போக்கால் இந்த ஆண்டில் மட்டும் 329 பேர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது:-


ஆப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி நிகழும் வயிற்றுப் போக்கு நோயானது இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரிய நாட்டை பாதித்திருக்கிறது.இதனால் தற்போது வரை 23 மாநிலங்களில் 67,903 பேருக்கு காலரா நோய் தாக்கியிருப்பதாகவும் அதில் 2,423 பேர் பலியாகியிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது."ஒழுங்கற்ற சுகாதாரம், மக்கள் நெருக்கம், மழையால் உருவாகிய குட்டைகள் ஆகியவைதான் காலராவும், வயிற்றுப் போக்கும் உருவாக காரணம். வயிற்றுப் போக்கால் இறந்தவர்களில் குழந்தைகளே அதிகம்" எனக் கூறியுள்ளது.

 

Tags :

Share via